Categories
தேசிய செய்திகள்

ரயில் பணிகளே அலர்ட்…. குளிர்பானத்தில் மயக்க மருந்து…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!

சென்னை சென்ட்ரலில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ராஜஸ்தானை சேர்ந்த நிதிஷ்குமார் யோகி மற்றும் அவருடைய சகோதரர் லோகேஷ் குமார் யோகி ஆகிய இருவரும் பயணம் செய்தனர். அப்போது அதே ரயில் பெட்டியில் பயணித்த மற்றொரு நபர் இவர்கள் இருவர் களிடையே தொடர்ந்து பேசிக் கொண்டு வந்துள்ளனர். நெல்லூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது அந்த நபர் இருவருக்கும் குளிர்பானத்தை குடிக்க கொடுத்துள்ளார். அந்த குளிர்பானத்தை குடித்த இருவரும் சற்று நேரத்தில் திடீரென மயக்கம் அடைந்தனர்.

அதன்பிறகு நாக்பூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது இருவருக்கும் மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்த போது தங்கள் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நாகூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தனர். உடனே நாகூர் ரயில்வே போலீசார் சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் குமார் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரயில் நிலையம் சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட அந்த மர்ம நபர் சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லக்கூடிய ரயிலில் மீண்டும் பயணிக்க ஏறும்போது ரயில்வே போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இவர் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பது தெரியவந்தது. இவர் ரயிலில் பயணித்து பயணிகளிடம் பேசி பழகுவது போல் நடித்து மயக்க மருந்து கொடுத்து அவர்களிடம் உள்ள பொருளை திருடி செல்வர் என்று தெரியவந்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நபரிடம் 7 செல்போன்கள், 250 மயக்க மாத்திரைகள் மற்றும் ரூ.4,000 பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |