ரயில் பயணங்களில் பயணிகள் பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில் சேவை கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மத்திய மற்றும் மேற்கு ரயில்வே வழித்தடத்தில் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கூட்ட நெரிசலை தவிர்க்க கூடிய வகையிலும் கூடுதலாக 194 ரயில் சேவைகள் இயக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும் பண்டிகை காலங்களில் முன்னிட்டு பல்வேறு புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் பயணிகளுக்கான வழிகாட்டுதல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை புலிகள் பின்பற்றத் தவறிவிட்டால் 500 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.