கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே.
அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
2 தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை சமர்ப்பித்து கவுண்டரில் டிக்கெட் பெற வேண்டும் என்றும், பரிசோதகர் கேட்கும்போது சான்றிதழைக் காண்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. தற்போது மேலும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது அதன்படி சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கான மாதாந்திர சீசன் டிக்கெட்டில் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் எண் அச்சிடப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.