Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு இனிமே மகிழ்ச்சி தான்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து சிறப்பு ரயில்களுடன் வழக்கமான ரயில் சேவையும் தொடங்கிவிட்டது. பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படுவதாக பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலத்தில் 66ஆவது ரயில்வே வார விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதில் கலந்து கொண்டு 19 கெஸ்டட் அதிகாரிகள், 485 கெஸ்டட் இல்லாத அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி சென்னை மண்டல ரயில்வே மேலாளர் கணேஷ் கவுரவித்தார்.

அதன் பிறகு பேசிய அவர், வேக கட்டுப்பாடுகள் தொடர்பான நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக முறைகளில் சென்னை மண்டல ரயில்வே நிர்வாக மாற்றம் செய்துள்ளது. மாடர்ன் சிக்னலின் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர், தாம்பரம், திருவள்ளூர், மாம்பலம், அரக்கோணம் மற்றும் அம்பத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 51 ரயில் நிலையங்களில் ஜிபிஎஸ் கடிகாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 19 ரயில் நிலையங்களில் தானியங்கி அறிவிப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் இலவச அவசர மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்களில் 36 புதிய கேட்டரிங் யூனிட்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் தற்போது 675 புறநகர் ரயில் சேவையில் 643 ரயில் சேவை செயல்பட தொடங்கியுள்ளது. மேலும் 90 சதவீதம் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |