ரயில் நிலையத்தை தவறவிடும் பிரச்சினை இனி இருக்காது. அந்த வகையில் ரயில் பயணிகளுக்கு சூப்பரான ஒரு வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.
சொந்த ஊர்களுக்கும், தினசரி வேலை, கல்வி, சுற்றுலா போன்ற பல காரணங்களுக்காக லட்சக்கணக்கான மக்கள் தினமும் ரயில்களில் பயணம் செய்து வருகின்றன. பேருந்து, விமானம், டாக்ஸி போன்றவற்றை விட ரயிலில் பயணம் செய்வது வசதியாகவும், மலிவான கட்டணமும் இருப்பதால் நிறைய பேர் ரயில் பயணங்களையே தேர்வு செய்கின்றனர். நீங்கள் அடிக்கடி ரயில் பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது.
இந்திய ரயில்வே தரப்பில் இருந்து பயணிகள் வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நாட்டின் அனைத்து ரயில்களிலும் வைபை, எக்ஸ்லேடன் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தொடங்கப்பட்டுள்ளது. ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறந்த சேவையை ரயில்வே தொடங்கியுள்ளது. இந்த வசதி அறிமுகமான பிறகு ரயிலில் நிம்மதியாக தூங்க முடியும். உறக்கத்தின் போது நீங்கள் இறங்க வேண்டிய நிலையத்தை தவறவிடுவது பற்றி நீங்கள் கவலைப்படவே தேவையில்லை.
ரயில் நிலையம் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே இந்த வசதி மூலமாக உங்களை எழுப்பி விட முடியும். இதன் மூலம் உங்கள் நிலையத்தை நீங்கள் தவறவிட மாட்டீர்கள். நன்றாகவும் தூங்கவும் முடியும். இந்திய ரயில்வேயால் தொடங்கப்பட்ட இந்த சேவையின் பெயர் ‘டெஸ்டினேஷன் அலாட் வெக்கபலாரம்’ ரயிலில் தூங்குபவர் குறித்து பலமுறை ரயில்வே வாரியத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் ரயில் நிலையத்தை நிறைய பேர் தவிர விடுகின்றனர். இந்த பிரச்சினையில் இருந்து விடுபட ரயில்வே நிர்வாகம் இந்த வசதியை தொடங்கியுள்ளது. இந்த சேவையை நீங்கள் எடுத்துக் கொண்டால் ரயில்வே நிலையம் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பாக உங்களது தொலைபேசிக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.
அதனால் உங்கள் லக்கேஜ் போன்றவற்றை எடுத்துக் கொண்டு நீங்கள் தயாராக இருக்கலாம். ஸ்டேஷன் வந்ததும் உடனடியாக கீழே இறங்கி விடலாம் இந்த வசதியால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த சேவையை நீங்கள் பெறுவதற்கு ஐ ஆர் சி டி சி ஹெல்ப்லைன் 139 அழைக்க வேண்டும். மொழியை தேர்ந்தெடுக்கப் பிறகு முதலில் 7 எண்ணையும், பின்னர் 2 என்ற எண்ணையும் அழுத்த வேண்டும். இப்போது 10 இழக்க பிஎன்ஆர்-ஐ உள்ளிட வேண்டும்.இதை உறுதிப்படுத்த 1ஐ டயல் செய்ய வேண்டும்.