Categories
அரசியல்

ரயில் பயணிகளுக்கு…. ஐஆர்சிடிசி ஏற்படுத்திய சூப்பர் வசதி…. ஒரே ஒரு SMS போதும்….!!!

ரயில் டிக்கெட் புக்கிங் செய்து பயணிப்பவர்களுக்கு பல வசதிகளை ஐஆர்சிடிசி செய்துள்ளது.

ஐஆர்சிடிசி ரயில் பயணிகளுக்காக 139 என்ற மொபைல் நம்பர் சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவையை பயன்படுத்தி நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். அது என்னவென்றால்,

1. PNR செக்கிங்
2. ரயில் வருகை/புறப்பாடு என்கியூரி
3. தங்குமிட வசதி
4. கட்டண விசாரணை
5. ரயில் நேர அட்டவணை என்கியூரி
6. ரயிலின் பெயர்/எண்

மேலும் வாடிக்கையாளர்கள் என்ற  www.indianrail.gov.in இணையதளத்திம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலமாக ரயில் நிலை, இருக்கை இருப்பு, ரயில் அட்டவணை., ரயில் தகவல் ரயில் நேர அட்டவணை, ரயில் கட்டணம் போன்ற அனைத்து தகவல்களும் உங்களுடைய போனில் எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும்.

அதுமட்டுமில்லாமல்

PNR செக்கிங்

“PNR <10 இலக்க PNR எண்>” என்று டைப் செய்து 139 க்கு SMS செய்யவும்
உதாரணமாக PNR 1234567890

ரயில் வருகை/புறப்பாடு விசாரணை:

SMS “AD<ரயில் எண்> < நிலைய STD குறியீடு>”
உதாரணமாக  AD 12859022

தங்குமிடம்:

” SEAT<ரயில் எண் > <DOJ** ddmmyy> <Station from:STD code> <station to:STD code>class><quota>***”139க்கு SMS செய்யவும்
உதாரணமாக, SEAT 12561 020611 0542 0571 SL G

கட்டண விசாரணை:

“FARE<ரயில் எண்> <DOJ** ddmmyy> <ஆரம்ப ஸ்டேசன்: STD குறியீடு> <முடியும் ஸ்டேசன்: STD குறியீடு> <வகுப்பு> <கோட்டா>***” 139 க்கு SMS செய்யவும்
உதாரணமாக, கட்டணம் 12561 020611 0542 0571 SL G

ரயில் நேர அட்டவணை:

“TIME<ரயில் எண்> என்று 139க்கு SMS செய்யவும்
உதாரணமாக: TIME 14034

ரயிலின் பெயர்/எண்:

“TN<ரயில் பெயர்> அல்லது TN< ரயில் எண்>” என 139க்கு SMS செய்யவும்
உதாரணமாக: TN 14034

நீங்கள் ஒரு SMSக்கு 3 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

 

Categories

Tech |