Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்….மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் அறிமுகம்…!!!

பயணிகள் மின்சார ரயில் டிக்கெட்டுகளை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெறக்கூடிய வசதியானது விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.  

சென்னை மாநகரில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையானது தற்போது அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக  கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பிறகு, மெட்ரோ ரயில் மற்றும் மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகமானது, பயணிகளின் வசதிக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை எழும்பூர், சென்ட்ரல் மற்றும் கிண்டி போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்களை பெறக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. இதை அடுத்து இந்த வசதியானது விரைவில் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

 

Categories

Tech |