Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. 46 ரெயில்களில் கூடுதலாக 60 பெட்டிகள் இணைப்பு….!!!

ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வருகிற 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் தேர்வு நடத்த போவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. இத்தேர்வு எழுத லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்திலும் பல்வேறு நகரங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது. எனவே இத்தேர்வினை எழுத செல்லும் தேர்வர்களின் வசதிக்காக கூடுதல் பெட்டிகளை ரயில்களில் இணைக்க, ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் என்பதால் அனைத்து ரயில்களும் நிரம்பி வரும் சூழலில், தேர்வு எழுத செல்பவர்களின் வசதிக்காக 46 ரயில்களில் கூடுதலாக பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதையடுத்து 2-ஆம் படுக்கை வசதி பெட்டிகள், முன்பதிவு இல்லாத பெட்டிகள் மற்றும் ஏ.சி.சேர்கார் பெட்டிகள் என மொத்தமாக 60 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகின்றன.

இதையடுத்து நாகர்கோவில்- தாம்பரம், தாம்பரம்-நாகர்கோவில், சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில், தாம்பரம்- எர்ணாகுளம், கோவை- மங்களூர், ராமேஸ்வரம்- ஒகா, எழும்பூர்- மங்களூர், கோவை- நாகர்கோவில், சென்ட்ரல்- பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன.

மேலும் ரெயில்வே தேர்வுக்காக கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்திற்கும் மற்றும்  தாம்பரத்தில் இருந்து கொச்சுவேலிக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ரெயில்வே தேர்வு சிறப்பு ரெயில் என்ற பெயரில் 7-ந்தேதி கொச்சுவேலியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்திற்கு 8-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு வந்து சேருகிறது. தாம்பரத்தில் இருந்து 10-ந் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் 11-ந் தேதி பகல் 12 மணிக்கு கொச்சுவேலி சென்றடைகிறது.

Categories

Tech |