சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ரயில் பயணிகளுக்கு அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, கடந்த மாதம் சென்னையில் உள்ள மெட்ரோ ரயிலில் பயணம் செய்தவர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அதில் 30 பயணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்த பொதுமக்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்துள்ளனர்.
இதையடுத்து ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணித்த முதல் 10 பயணிகளுக்கு பொருள் மற்றும் 30 நாட்களுக்கு விருப்பம்போல் பயணம் செய்து கொள்வதற்கான மெட்ரோ பயண அட்டை அல்லது ரூ.2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் மே 21-ஆம் தேதி அடுத்த மாதத்திற்கான குலுக்கல் முறை நடைபெறும் என்றும், பரிசு பொருள்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள பயணிகள் மெட்ரோ ரயில் நிலைய கட்டுப்பாட்டாளர்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.