தமிழகத்தில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட 20 முன்பதிவில்லா பயணியர் ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் அரக்கோணம் – திருப்பதி, புதுச்சேரி – திருப்பதி, சென்னை சென்ட்ரல் – சூலுார்பேட்டை, மயிலாடுதுறை – திருச்சி, மன்னார்குடி – திருச்சி, மானாமதுரை – திருச்சி, திருவனந்தபுரம் – நாகர்கோவில், திருநெல்வேலி – நாகர்கோவில், செங்கோட்டை – மதுரை, ஈரோடு – கோவை இடையே இருவழிகளிலும் 20 பயணியர் ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அகல ரயில்பாதை பணி முடிந்துள்ள மதுரை – ஆண்டிப்பட்டி இடையே இரண்டு புதிய ரயில்களை இயக்கவும், ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தெற்கு ரயில்வேயால் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.