Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் வசதி…. இன்று முதல் அமலுக்கு வரும் அட்டவணை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.போக்குவரத்தை ஒப்பிடுகையில் ரெயில் போக்குவரத்தில் டிக்கெட் கட்டணமும் குறைவு தான், அதேசமயம் பாதுகாப்பாகவும் சௌகரியமாகவும் பயணிக்க முடியும். அதனாலையே பெரும்பாலானோ ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். அதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு இந்திய ரயில்வே பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.

இந்தியாவில் தினமும் 3240 எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் ரயில்கள், 3000 சாதாரண பயணிகள் ரயில்கள், 5,660 புறநகர் ரயில்கள் இயங்குகின்றன. அதில் நாள்தோறும் 2.23 கோடி மக்கள் பயணம் செய்கிறார்கள்.இந்நிலையில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ரயில்வே அட்டவணையை ரயில்கள் ஒரு பார்வை என்ற பெயரில் இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இதனை www.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் பயணிகள் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |