தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதை தொடர்ந்தே வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ராமேஸ்வரம் -செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து ஏப்ரல் 7, 16, 21, 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2,9,16,23,30, ஜூலை 7,14,21,28 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கும், செகந்திராபாத்தில் இருந்து ஏப்ரல் 5, 12 , 19, 26, மே 3,10,17,24,31, ஜூன் 7, 14, 21, 28 ஜூலை 5, 12, 19, 20 ஆகிய செவ்வாய்க் கிழமைகளில் இரவு 9.25 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது