இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் தான் அதிகம் பயணிக்கின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பு ரயில்வே வாரியம் செய்துள்ள பல மாற்றங்களை பயணிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது ரயிலில் பயணம் செய்வதற்கான விதிமுறைகளை ரயில்வே வாரியம் தற்போது மாற்றியுள்ளது. ரயிலில் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் பல சிரமங்களை சந்திப்பதால் ரயில்வே வாரியம் விதிகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி ரயிலில் அருகில் உள்ள பெர்த்களில் இருப்பவர்கள்சத்தமாக பேசுவது மற்றும் பாடல்களை கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு பயணிகளின் தூக்கத்தை கெடுக்கக் கூடாது. அப்படி பயணிகளிடம் புகார் வந்தால் அதை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் முழு பொறுப்பும் ரயில்வே ஊழியர்களையே சேரும். இந்த விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து மண்டல பொது மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. பக்கத்து இருக்கையில் இருக்கும் பயணி சத்தமாக பேசுவதாகவும் மொபைல் போனில் பாட்டு கேட்பதாகவும் பயணிகள் தரப்பில் இருந்து ஏதாவது புகார் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. புதிய விதிகளின்படி இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் சத்தமாக பேசுவது மற்றும் பாட்டு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. அதேசமயம் இரவு பயணத்தில் இரவு விளக்கு தவிர அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.