இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். இதில் டிக்கெட் கட்டணமும் மிக குறைவுதான். முன்கூட்டியே டிக்கெட் கிடைக்காவிட்டாலும் தட்கள் மற்றும் பிரீமியம் தக்கல் வசதியில் அதிகம் செலவு செய்து ரயிலில் பயணிக்க முயற்சி செய்கிறார்கள். இந்நிலையில் நீங்கள் பயணிக்கும் ரயிலில் ஏதாவது இடம் காலியாக இருந்தால் அதை பற்றி இனி உடனடியாக நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். உடனே அந்த டிக்கெட்டை முன் பதிவு செய்து விடலாம். அதற்கான வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது ஐ ஆர் சி டி சி இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது அனைத்து ரயில்களிலும் இருக்கைகள் இருப்பதை காண முடியும். இருக்கை காலியாக இருந்தால் அதனை முன் பதிவு செய்து விடலாம். ஐ ஆர் சி டி சி புதிதாக புஷ் நோட்டிபிகேஷன் என்ற வசதியை தொடங்கியுள்ளது. அதன் மூலமாக பயணிகள் இருக்கை வசதி உள்ளிட்ட பல வகையான வசதிகள் குறித்து தகவல்களை எளிதில் பெற முடியும்.
நீங்கள் பயணிக்க கூடிய ரயிலில் ஏதாவது ஒரு பெட்டியில் இருக்கை காலியாக இருந்தால் அதன் அறிவிப்பு பயனாளிகளின் மொபைல் போனுக்கு தகவலாக வந்து சேரும். அதனை நீங்கள் முன் பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக பயனர்கள் முதலில் ஐ ஆர் சி டி சி இணையதளத்திற்கு சென்று புஷ் நோட்டிபிகேஷன் என்ற வசதியை பெற வேண்டும். அவ்வாறு செய்து வைத்தால் உடனுக்குடன் உங்களுக்கு அனைத்து அப்டேட்டுகளும் கிடைத்துவிடும்.