Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தள்ளுபடியில் ரயில் டிக்கெட்…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு…..!!!

ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் நீண்ட நேரம் டிக்கெட் கவுண்டரில் நிற்கின்றனர். இதற்கு பதிலாக தானியங்கி இயந்திரம் மூலமாக டிக்கெட் பெறும் வசதி தற்போது பயன்பாட்டில் உள்ளது. தற்போது வரை தெற்கு ரயில்வே சார்பில் ரயில் நிலையங்களில் 99 தானியங்கி இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் நீண்ட வரிசையில் நிற்பதை தவிர்க்க தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் பெறும் வசதி தற்போது பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் இந்த தானியங்கி இயந்திரங்களில் க்யூ ஆர் கோடு மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியை பயன்படுத்தி பயணம், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட் பெறுபவர்களுக்கு 0.5% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறுதல்,சீசன் டிக்கெட்டுகளை புதுப்பித்தல் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளை ரீ சார்ஜ் செய்தல் உள்ளிட்ட சேவைகளை க்யூ ஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |