Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வந்தாச்சு புது ரூல்ஸ்…. இனி அந்த பிரச்சனை இருக்காது….!!!!

இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்பவர்கள் நேரடியாக டிக்கெட் எடுப்பதை விட அதிக அளவு ஆன்லைன் மூலமாக அதுவும் ஐ ஆர் சி டி சி ஆப் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்கின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பு இந்திய ரயில்வே மற்றும் ஐ ஆர் சி டி சி புக்கிங் தொடர்பான விதிமுறைகளை கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன்படி இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது சக பயணிகள் கொடுக்கும் சில தொந்தரவுகளால் நிம்மதியாக உறங்க முடியாது. இரவு நேரத்தில் பயணிப்பவர்களிடம் இருந்து அதிக அளவு புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனவே ரயில்வேயில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளின் படி இனி சக பயணிகள் மொபைல் போனில் சத்தமாக பேசுவது மற்றும் சத்தமாக பாடல்களை கேட்பது கூடாது.

அவ்வாறு தொந்தரவு செய்வதாக புகார்கள் வந்தால் தொந்தரவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்,மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு ரயில்வே ஊழியர்கள் உடனடியாக உதவி வழங்குவார்கள் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனவே இனி இரவு நேரங்களில் பயணம் செய்யும்போது பத்து மணிக்கு மேல் இந்த விதிமுறைகளை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மேலும் இரவு நேரங்களில் முடிந்தவரை அனைத்து விளக்குகளையும் அணைத்து விட வேண்டும் . இதனால் சக பயணிகளின் தூக்கம் கெடாமல் இருக்கும். அது மட்டுமல்லாமல் சோதனை ஊழியர்கள்,எலக்ட்ரீசியன் மற்றும் கேட்டரிங் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் விரைவில் அமைதியாக வேலை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |