Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம குட் நியூஸ்… ஏப்ரல் 1 முதல் தொடக்கம்…!!!

தமிழகத்தில் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் சேவை தொடரும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மதுரை – பிகானீர் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது. பிலாஸ்பூர் – திருநெல்வேலி ஏப்ரல் 6ஆம் தேதி ஜூன் 29ஆம் தேதி சிறப்பு ரயில் சேவை இயக்கப்படுகிறது.திருநெல்வேலி – தாதர் ஏப்ரல் 7ஆம் தேதி ஜூன் 30ஆம் தேதி சிறப்பு ரயில் சேவை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

அதேபோல சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு இடையே முழுவதும் முன்பதிவு செய்யப்பட்ட சிறப்பு கட்டண ரயில் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீங்கள் திருப்பதிக்கு செல்ல வேண்டுமென்றால் இன்றே முன் பதிவு செய்யுங்கள்.

Categories

Tech |