Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ் ஓன்று வெளியாகியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா  காரணமாக பொது  போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பின் நாளடைவில் நோய் பரவல் வெகுவாக குறைந்ததை  அடுத்து முழு ஊரடங்கு அதிரடியாக விலக்கிக் கொள்ளப்பட்டிருந்தது. இதனால் மீண்டும் பொது போக்குவரத்து சேவை இயங்க  தொடங்கியுள்ளது.

அந்த வகையில் கொரோனா  வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த அனைத்து பயணிகள் ரயில் சேவைகளும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் டு ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரயில்ரயில் (16089), ஜோலார்பேட்டை- சென்னை சென்ட்ரல் ஏலகிரி விரைவு ரயில் (16090), நிலம்பூர் சாலை- கோட்டயம் விரைவு ரயில்  (16325), கோட்டயம்- நிலம்பூர் சாலை விரைவு ரயில் (16326), புனலூர்- குருவாயூர் விரைவு ரயில் (16327) முன்பதில்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.

அதேபோல் திருச்சி சந்திப்பு- பாலக்காடு டவுன் விரைவு ரயில் (16843), பாலக்காடு டவுன்-திருச்சி சந்திப்பு விரைவு ரயில் (16844), நாகர்கோவில்- கோட்டயம் விரைவு ரயில்  (16366) என மொத்தம் 14 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.  இந்நிலையில் முன்பதிவு பெட்டிகள் தற்போது முன்பதிவில்லாத பெட்டிகள் ஆக மாறுவதால் இதில்  ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் முழு பணத்தையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் இதுதொடர்பாக இந்த ரயில்கள் முன்பதிவு செய்த பயணிகள் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஜோலார்பேட்டை, ஏலகிரி ரயில் உள்ளிட்ட 14 விரைவு ரயில்கள் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகளுடன் வருகிற ஒன்றாம் தேதி முதல் இயக்கப்பட இருக்கின்ற நிலையில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |