இந்தியாவில் உள்ள பன்னாட்டு பாரம்பரிய சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் எளிதில் சுற்றிப்பார்க்கும் வகையில் இந்திய ரயில்வே கடவை 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் தேதி பாரத் கௌரவ் ரயில்கள் என்ற திட்டத்தை தொடங்கியது. அந்த திட்டத்திற்காக 8 பயண சேவையாளர்கள் தெற்கு ரயில்வேயில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்தனர். அதில் முதல்கட்டமாக கோயம்புத்தூர் மற்றும் சீரடி பாரத் கௌரவம் ரயில் சேவை கடந்த ஜூலை 14-ஆம் தேதி தொடங்கியது.
இதையடுத்து இரண்டாவது கட்டமாக மதுரை -வாரணாசி பாரத் கௌரவ ரயில் சேவை வருகின்ற ஜூலை 23 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த 12 நாள் சுற்றுலா ரயில் மதுரையிலிருந்து புறப்பட்டு பூரி, கொல்கத்தா, கயா மற்றும் வாரணாசி வழியாக பிரயாக்ராஜ் சங்கம் வந்தும் மறுமார்க்கத்தில் விஜயவாடா மற்றும் சென்னை வழியாக மதுரை வந்து சேரும். இதற்காக ரயில் கட்டணமாக ரூபாய் ஒரு கோடி செலுத்தி பயண சேவையாளர் பதிவு செய்துள்ளார்.
இதன் மூலமாக இனி பொதுமக்கள் காசி போவது எளிமையாக பட்டு உள்ளதால் கங்கையில் நீராடி மகிழலாம் என பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே தனியார் மூலம் கோவை மற்றும் சீரடி ரயில் இயக்கப்பட்டு தற்போது மிகவும் சர்ச்சைக்குள்ளாகி உள்ள நிலையில்,மீண்டும் மதுரை மற்றும் காசி இடையே பாரதம் திட்டத்தின்கீழ் தெற்கு ரயில்வேயில் ரயில் சேவை தொடங்கப்படும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.