Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. மெட்ரோ நிர்வாகத்தின் சூப்பர் முடிவு…!!!

 மெட்ரோ ரயில் நிலையங்களில் கடைகள், ஓட்டல்கள் அமைக்க அனுமதி தருவது என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் ரயில் பயணிகளின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும்   தற்போது மெட்ரோ ரயிலில் தினமும் 2 லட்சம் பேர் வரை, பயணம் செய்து வருகின்றனர். மேலும் சில மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கையானது 3 லட்சமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அவர்களைக் கவரும் வகையிலான பல அதிரடியான திட்டங்களை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது 30க்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏடிஎம் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தற்போது பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களில் கடைகள், உணவு கூடங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதாவது விமான நிலையங்களில் மக்கள் ஷாப்பிங் செய்வதைப் போன்று மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயணிகளின் வசதிக்காக கடைகள் மற்றும் ஓட்டல்கள் அமைக்க அனுமதி தர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த அறிவிப்பால் ரயில் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Categories

Tech |