முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் போக்குவரத்து முடங்கியது. கடந்த 2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. தற்போது தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து ரயில்களும் படிப்படியாக இயங்கி வருகிறது. இந்நிலையில் 14 முன்பதிவு ரயில்கள், முன்பதிவில்லா ரெயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு பணமும் திரும்ப கொடுக்கப்படும். இதற்கான அறிவிப்பு முன்பதிவு செய்தவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த 14 முன்பதிவில்லா ரயில்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படுகிறது. இதன் விவரம்,
- சென்னை சென்ட்ரல்- ஜோலார்பேட்டை ஏலகிரி விரைவு ரயில் (16089)
- ஜோலார்பேட்டை- சென்னை சென்ட்ரல் ஏலகிரி விரைவு ரயில் (16090)
- நிலம்பூர் சாலை-கேட்டயம் விரைவு ரயில் (16325)
- கேட்டயம்-நிலம்பூர் சாலை விரைவு ரயில் (16326)
- புனலூர்- குருவாயூர் விரைவு ரயில் (16327)
- திருச்சி சந்திப்பு-பாலக்காடு டவுன் விரைவு ரயில் (16843)
- பாலக்காடு டவுன்-திருச்சி சந்திப்பு விரைவு ரயில் (16844)
- நாகர்கோவில்- கேட்டயம் விரைவு ரயில் (16366)
போன்றவைகள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.