Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வருகின்ற 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, கடற்கரை-வேளச்சேரி, சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல்-அரக்கோணம், சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி/சூளூர்பேட்டை ஆகிய பிரிவுகளில் மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |