Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு…. தெற்கு ரயில்வே வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவிலுள்ள நடுத்தர மற்றும் சாமானியமக்களுக்கு ஏற்ற போக்குவரத்து வசதியாக ரயில் போக்குவரத்து திகழ்கிறது. அத்துடன் இவற்றில் பயணிகள் கட்டணம் மற்ற போக்குவரத்து கட்டணங்களை காட்டிலும் குறைவாக உள்ளதால் அதிக எண்ணிக்கையில் மக்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்தியாவில் சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து சிறப்பு ரயில்கள், சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்தியாவிலுள்ள ரயில்களில் பாதியளவு மின்சார ரயில்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் ரயில்கள் அனைத்தும் எக்ஸ்பிரஸ் ரயில்களாக மாற்றப்பட்டு இருக்கிறது.

இதனால் ரயில் கட்டணங்கள் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் பாதி அளவு ரயில்கள் தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இத்தகைய ரயில்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால், இதற்கு அதிகளவில் எதிர்ப்புகள் வருகிறது. இந்தியாவில் ரயில்வே துறையில் ஒரு சில தொழில்நுட்ப காரணங்களால் குறிப்பிட்ட ரயில்களின் நேரங்கள் மாற்றியமைத்து ரயில் சேவை இயக்கப்படும். அத்துடன் சிறப்பு ரயில்களானது மக்களின் கோரிக்கைகளுக்கு ஏற்றபடி இயக்கப்படும். அந்த அடிப்படையில் தெலுங்கானா மாநிலம், செகந்திராபாத்திலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு கட்டண ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செகந்திராபாத்திலிருந்து செப்-4,8 ஆம் தேதிகளில் காலை 8:00 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில்கள் மறு நாள் காலை 8:30 மணிக்கு வேளாங்கண்ணி போகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று வேளாங்கண்ணியிலிருந்து செப்-5,9 தேதிகளில் இரவு 11:50 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில்கள், 3ஆம் நாள் அதிகாலை 3:35 மணிக்கு செகந்திராபாத் போகும். இந்த ரயில்கள் காட்பாடி, வேலூர் கண்டோன் மெண்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியே இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்து இருக்கிறது.

Categories

Tech |