நவராத்திரி பண்டிகை நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்தப் பண்டிகையின் போது பக்தர்கள் ஒன்பது நாட்கள் விரதம் இருப்பது வழக்கம். இந்த காலகட்டத்தில் ரயிலில் பயணிக்கும் போது எப்படி சாப்பிடுவது என்பது குறித்து பக்தர்களுக்கு குழப்பம் நிலவி வந்தது. இந்த குழப்பத்திற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
ரயிலில் பயணிக்கும் பக்தர்களுக்கு விரத உணவு பட்டியலை ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ளது. இந்த நவராத்திரி விரத உணவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த நவராத்திரி உணவு விலை 99 ரூபாய் முதல் தொடங்குகிறது. விரத உணவு பட்டியலில் பழங்கள் உள்ளிட்ட பல்வேறு அறுசுவை உணவுகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் பூண்டு மற்றும் வெங்காயம் இல்லாமல் சமைக்கப்பட்ட உணவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நவராத்திரி விரத உணவுப் பட்டியல்:
* ஆலூ சாப் – உருளைக் கிழங்கு, நிலக்கடை சேர்த்து தயாரிக்கப்படும் உணவு.
* சபுடானா டிக்கி – வறுக்கப்பட்டு தயிருடன் சேர்த்து வழங்கப்படும் உணவு.
* சபுடானா கிச்சடி, சிங்கதா, ஆலு பராத்தா, பனீர் மக்மலி, அரபிக் மசாலா, சிதபால் கீர் ஆகிய உணவுகளும் இடம்பெற்றுள்ளன.
மற்றொரு பிளேட்ட்டில் சபுடானா கிச்சடி, சிங்கதா, ஆலூ பராத்தா, கோஃப்தா கரி, ஆலூ சாப், சிதபால் கீர் ஆகியன வழங்கப்படுகின்றன.
* இதில் சிதபால் கீர் என்பது சித்தாப்பழம், கிரீம் கலந்து தயாரிக்கப்படும் இனிப்பு ஆகும்.
இந்த நவராத்திரி விரத உணவு புக் செய்ய விரும்புவோர் IRCTC e-Catering இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.