Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. சிறப்பு ரயில்கள் திடீர் ரத்து…..!!!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக பணியாளர்கள் சிறப்பு ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 9.32 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில் இன்று, 23, 25 ஆகிய தேதிகளிலும், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில் இன்று, நாளை மற்றும் 23, 25ம் தேதிகளிலும் காலை 10.56 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில் இன்று, 23, 25ம் தேதிகளிலும், காலை 10.05 மணிக்கு இயக்கப்படும் ரயில் 22ம் தேதிகளில் சிங்கப்பெருமாள் கோவில்- செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது.

அதைபோல செங்கல்பட்டு- சென்னை கடற்கரை இடையே காலை 11.30 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில் இன்று, 23, 25 ஆகிய தேதிகளிலும், காலை 12.20 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில் இன்று மற்றும் நாளை, 23, 25 ஆகிய தேதிகளிலும், பிற்பகல் 1 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில் இன்று, 23, 25 ஆகிய தேதிகளிலும், பிற்பகல் 12.25 மணிக்கு இயக்கப்படும் ரயில் 22ம் தேதிகளில் செங்கல்பட்டு- சிங்கப்பெருமாள் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மேலும் திருமால்பூர்- சென்னை கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் பணியாளர் சிறப்பு ரயில் இன்று மற்றும் நாளை, 22, 23, 25 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் பணியாளர் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருமால்பூர்- சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 12 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் சிறப்பு ரயில் இன்று மற்றும் நாளை 22, 23, 25ம் தேதிகளில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |