இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.அப்படி தினந்தோறும் ரயிலில் பயணம் செய்பவர்கள் அவர்கள் செல்லும் வழித்தடத்தில் எந்தெந்த ரயில்கள் ஓடுகிறது எந்தெந்த ரயில்கள் இயங்கவில்லை என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்வது நல்லது. இந்தியாவில் குறிப்பாக சென்னை, மும்பை,கொல்கத்தா மற்றும் டெல்லி போன்ற நகரங்களில் தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கிறார்கள்.
இதனிடையே இந்திய ரயில்வே செயல்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட சில காரணங்களால் அவ்வபோது பல ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.எனவே ஐ ஆர் சி டி சி இணையதளத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் குறித்த தகவல்களை பயணிகள் விரைவில் அறிந்து கொள்ளலாம். அதற்கு https://www.irctchelp.in/cancelled-trains-list/என்ற இணையதள பக்கத்தை அணுகி பயணிகள் ரயில்கள் குறித்த விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.