பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பராமரிப்பு பணி நடைபெறுவதன் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி திருச்செந்தூர் – திருநெல்வேலி இடையே மாலை 4:25 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 18-ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து மாலை 5.15 மணிக்கு 50 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும். அதேபோல் திருநெல்வேலி – திருச்செந்தூர் இடையே மாலை 6:45 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 18-ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து இரவு 7:10 மணிக்கு 25 நிமிடங்கள் காலதாமதம் ஆக புறப்படும்.
ஈரோடு – ஜோலார்பேட்டை இடையே மாலை 4.10 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 18-ஆம் தேதி ஈரோட்டில் இருந்து மாலை 6.10 மணிக்கு இரண்டு மணி நேரங்கள் காலதாமதமாக புறப்படுகிறது. இதனை அடுத்து திருவனந்தபுரம் – குருவாயூர் இடையே மாலை 5 30 மணிக்கு இயக்கப்படும். எக்ஸ்பிரஸ் ரயில் வருகிற 18-ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.