சென்னை எழும்பூர் பணி மனையில் பராமரிப்புப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் நாகர்கோவில்- சென்னை வாரந்திர விரைவு ரயில் சேவையில் மாற்றம் நிகழ்வதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாகர்கோவில் சந்திப்பில் இருந்து சென்னை எழும்பூருக்கு வெள்ளிக்கிழமைகளில் (ஜனவரி 21, 28, பிப்ரவரி 4, 11, 18, 25 போன்ற தேதிகளில்) மாலை 4.15 மணிக்கு வாராந்திர அதிவிரைவு ரயில் (வண்டி எண்:12668) தாம்பரம் வரை மட்டும் இயக்கப்படும்.
அதேபோன்று சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு வியாழக்கிழமைகளில் (ஜனவரி 20, 27, பிப்ரவரி 3, 10, 17, 24, மார்ச் 3 போன்ற தேதிகளில்) இரவு 6.55 மணிக்கு இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 12667) எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில், இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.