Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…. ரயில் சேவையில் திடீர் மாற்றம்….!!!!

சென்னை அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை மார்க்கத்தில் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் விரைவு ரயில் சேவை மாற்றம் செய்யப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் -மங்களூருக்கு ஜனவரி 29ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 5 ஆகிய தேதிகளில் மதியம் 1.15 மணிக்கு புறப்படும் மேற்கு கடற்கரை அதிவிரைவு ரயில் (22673) சென்னை சென்ட்ரல் -ஜோலார்பேட்டை இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்படும். மங்களூர் சென்ட்ரல் – சென்னை சென்ட்ரலுக்கு ஜனவரி 28, பிப்ரவரி 4 ஆகிய தேதிகளில் இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் மேற்கு கடற்கரை அதிவிரைவு ரயில் (22638) ஜோலார்பேட்டை – சென்னை சென்ட்ரல் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இதனைத் தவிர சில விரைவு ரயில்களில் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |