ரயில்வே சேவையில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்ப்போம்.
தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி மார்ச் 15ஆம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் மார்க்கத்தில் ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது. தாம்பரம் செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே மூன்றாவது ரயில் பாதை பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்து செல்லும் புறநகர் சிறப்பு ரயில்களின் சேவை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் புதிய கால அட்டவணையை உருவாக்கியுள்ளது. புறநகர் ரயில்களுக்கான கால அட்டவணை மார்ச் 14-ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை ஆறு நாட்கள் மட்டும் அமலில் இருக்கும்.
அதேபோல ஜபல்பூர் – கோவை சிறப்பு ரயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மும்பை கோட்டம், கல்யான் பகுதியில் பராமரிப்பு பணியால், நாளை காலை, 11:00 மணிக்கு, ஜபல்பூரில் புறப்படும், ஜபல்பூர் – கோவை சிறப்பு ரயில், மார்ச், 15 மாலை, 5:10க்கு, கோவையில் கிளம்பும் கோவை – ஜபல்பூர் சிறப்பு ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.