Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….. இனி இதற்கு ஜிஎஸ்டி வரி….. அமைச்சகம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். கொரோனா பரவல் காலத்தில் ஊரடங்கு காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அதனால் பயணிகளும் நலனை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ரயில்கள் பயணிகளின் முன்பதிவு அடிப்படையில் இயக்கப்பட்டது. எப்போதும் ரயில் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து பயணிப்பது வழக்கம். ஆனால் முன்பதிவு செய்யப்பட டிக்கெட் ஏதேனும் ஒரு சில காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. தற்போது IRCTC அழிக்கும் சலுகையில் ஒன்றாக முன்பதிவு செய்வர் திடீரென டிக்கெட்டை ரத்து செய்தால் டிக்கெட் தொகை திரும்பப்பெறும் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரத்து செய்யப்படும் டிக்கெட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ரயில் டிக்கெட் ரத்து செய்வதன் மூலம் சேவை வழங்குநருக்கு ஒரு சிறிய தொகைய இழப்பீடு அளிக்கப்படும். மேலும் ரத்து கட்டணமாக வசூலிக்கப்படும். அதுமட்டுமில்லாமல் ரத்து கட்டணம் என்பது ஒப்பந்தத்தை மீறுவதற்கு பதிலாக செலுத்தப்படுவதால், இனி அதற்கு ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இந்த ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான ஜிஎஸ்டி, ஏசி வகுப்புகளுக்கு மட்டும் பொருந்தும் என்றும் இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் டிக்கெட்களை ரத்து செய்வதற்கு ஜிஎஸ்டி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் ஏசி முதல் வகுப்பு அல்லது ஏசி எக்ஸ்கியூட்டிவ் வகுப்பு டிக்கெட்டை ரத்து செய்யும்போது அதற்கு சேவை கட்டணமாக ரூ.240 பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. தற்போது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியால் ரூ.240 க்கு 5% ஜிஎஸ்டி செலத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதனைப் போல 12 மணி முதல் 4:00 மணி நேரம் வரை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்களை ரத்து செய்ய, முன் பதிவு தொகையில் 50% வசூலிக்கப்படுகிறது. அதிலும் 5% ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |