கொச்சுவேலி ரயில் மீண்டும் இயக்கப்படுவதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் ரயில் நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு தினம்தோறும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக இந்த ரயில் நிலையத்தில் இருந்து கொச்சிவேலிக்கு செல்லும் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மீண்டும் வருகின்ற 11-ஆம் தேதியில் இருந்து கொச்சிவேலி பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து 7.55 மணிக்கு புறப்பட்டு காலை 10.10 மணிக்கு கொச்சிவேலியை சென்றடையும். அதன் பின்னர் அங்கிருந்து மதியம் 1.40 மணிக்கு கொச்சுவேலியில் இருந்து புறப்பட்டு மாலை 4.25 மணிக்கு நாகர்கோவில் வந்தடைகிறது.