ரயில் டிக்கெட் புக்கிங் விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பேருந்து, டாக்ஸி, பைக், விமானங்களை விட ரயில்களில் மக்கள் பலரும் பயணம் செய்கின்றனர். அப்படி அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வந்துள்ளது. ரயில்வேதுறை டிக்கெட் முன்பதிவு விதிகளை மாற்றியுள்ளது. முன்பைவிட இப்போது குறைந்த நேரத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ள முடியும். புதிய விதிமுறையின்படி நீங்கள் செல்லும் இடத்திற்கான முகவரியை கொடுக்க தேவை இல்லை. இந்த உத்தரவை ரயில்வே அமைச்சகம் உடனடியாக அமல்படுத்தியுள்ளது.
ரயில்வே சார்பில் தொற்று காரணமாக ஐஆர்சிடிசி வெப்சைட் மட்டும் செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் சேருமிடம் முகவரியை பதிவிடுவது கட்டாயமாக்கப் பட்டிருந்தது. இது அனைவருக்கும் சிரமமாக இருந்த நிலையில், தற்போது முகவரி பதிவிடுவதற்கு அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது. தொற்று பாதிப்புகள் குறைந்து உள்ளதால் பயணிகள் சேரும் இடத்தின் முகவரியை ஐஆர்சிடிசி இனி கேட்காது. இதனால் ரயில் பயணிகள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். இதனால் விரைவில் ரயில்வே டிக்கெட்டை புக்கிங் செய்து கொள்ள முடியும். கன்ஃபார்ம் டிக்கெட் கிடைக்கவும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. இது போன்ற நிறைய விதிமுறைகளை ஐஆர்சிடிசி மாற்றி வருகின்றது.