Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!!!!

கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று நோய் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. மேலும் அனைத்து வகையான பொழுது போக்குவரத்துகளும் தடைசெய்யப்பட்டது. அரசு ஊழியர்கள், மருத்துவ மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பயணம் செய்வதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவர்களின் பயணத்திற்காக குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அரசு பேருந்துகள் மெட்ரோ ரயில்கள் போன்றவை இயக்கப்பட்டு வந்தது.

மற்றபடி அனைத்து விதமான போக்குவரத்துகளும் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பின் தொற்று  குறையத் தொடங்கியதை  தொடர்ந்து ஊரடங்கு  கட்டுப்பாடுகளில் தளர்வுகள்  வழங்கப்பட்டது. இதனால் போக்குவரத்து, வாகனங்களின்  இயக்கம் தொடங்கியது. ஆனால் பயணிகளின் சேவை தடைசெய்யப்பட்டு முன்பதிவு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதன்படி செயல்பட உள்ள பயணிகள் ரயிலின் பட்டியலையும் வெளியிட்டு இருக்கின்றது. மேலும் இவை அனைத்தும் முன்பதிவில்லாத விரைவு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் மே 30 – ஆம் தேதி முதல் மதுரையில் இருந்து காலை 06.35 மணிக்கு ராமேஸ்வரத்திற்கும், மறுமார்க்கத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 06.05 மணிக்கு மதுரைக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.மே 23 – ஆம் தேதி முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு கோவைக்கும், மறுமார்க்கத்தில் மாலை 03.45 மணிக்கு கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கும் ரயில் சேவை தொடங்குக்கின்றது. திருச்செந்தூரில் இருந்து காலை 07.10 மணிக்கு நெல்லைக்கும், மறுமார்க்கத்தில் மாலை 06.45 மணிக்கு நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும் பயணிகள் ரயில் இயக்கப்படுன்கிறது. மே 30 – ஆம் தேதி முதல் நெல்லையில் இருந்து மாலை 06.15 மணிக்கு செங்கோட்டைக்கும், செங்கோட்டையில் இருந்து காலை 06.40 மணிக்கு நெல்லைக்கு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது.

Categories

Tech |