Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. மீண்டும் தொடங்கிய ரயில்வே சேவைகள்….!!!!!!!!

உலகளாவிய கொரோனா  தொற்று பரவ தொடங்கியது முதல் ரயில்வே பல சேவைகளை நிறுத்தியுள்ளது. ஆனால் நிலைமை மீண்டும் தற்போது சீராகி வருகின்ற நிலையில் தற்போது மீண்டும் இந்த சேவைகளை ரயில்வே தொடங்கியிருக்கின்றது. உதாரணமாக பெரும்பாலான ரயில்களில் போர்வை மற்றும் படுக்கை வசதிகள் இந்திய ரயில்வே மூலமாக மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. இது தவிர ஜெனரல் டிக்கெட்டும் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. எனினும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காக மக்கள் காத்திருந்தனர். இதுபற்றி பலமுறை செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.

கொரோனா வைரஸ்க்கு முன்பு மூத்த குடிமக்கள் ரயில்கள் டிக்கெட்டுகள் தள்ளுபடியை பெற்றன.  தற்போது அது நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஜூலை ஒன்று 2022 முதல் மூத்த குடிமக்களுக்கு ரயில்களில் அளிக்கப்பட்ட விளக்கு மீண்டும் அளிக்கப்படும் என ஒரு செய்தி அறிக்கையில் கூறப்பட்டு இருக்கின்றது. இந்த செய்தி நாளுக்கு நாள் தொடர்ந்து வைரலாகி கொண்டே வருகிறது. ஆனால் இந்த செய்தி போலியானது என தெரிவித்துக்கொள்கிறோம். ஏனென்றால் இனி இது வரை இதுபோன்ற எந்த அறிவிப்பும் ரயில்வே வெளியிடப்படவில்லை. இதை விசாரித்த போது பிஐபி ஃபேக்ட் ஷீட் மூலம் இது குறித்த தகவல் வழங்கியுள்ளது.  பிஐபி ஃபேக்ட் ஷீட் செய்தது, இந்திய ரயில்வே மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை ஜூலை 12 ஆயிரத்து 22 முதல் மீண்டும் தொடங்கும் என ஒரு போலி ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாற்று திறனாளிகள், நோயாளிகள் மற்றும் மாணவர்களுக்கு மட்டுமே இந்திய ரயில்வேயில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது. மேலும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரை போலி செய்திகளை  நம்ப வேண்டாம் என அரசாங்கம் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருவது  குறிப்பிடத்தக்கதாகும். இதற்கிடையில் பயணிகளின்  வசதியை அதிகரிக்க இந்திய ரயில்வே ஜூலை 1ஆம் தேதி முதல் தனது பலவித முறைகளில் மாற்றங்களை செய்ய இருக்கின்றது. இந்த மாற்றத்தின் பலனாக பயணிகளுக்கு சிறந்த வசதிகள் கிடைக்கப் போகின்றது. இந்த முறை மாற்றத்தை ரயில்வே அதிகாரிகள் நேரடியாக பொறுப்புகள் வழங்கப்படும் அதன்படி ரயில்வே பயணிகளுக்கு ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் அது அதிகாரிகளின் பொறுப்பாக இருக்கும்.

Categories

Tech |