Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. “வரும் 18ஆம் தேதி முதல் டெமு ரயில் இயக்கம்”…. எங்கு தெரியுமா…?????

கொரோனா தாக்கல் காரணமாக நிறுத்தப்பட்ட திருச்சி-காரைக்குடி டெமு ரயில் வருகின்ற 18ஆம் தேதி முதல் இயக்கப்படுகின்றது.

புதுக்கோட்டை மாவட்டம் வழியாக திருச்சி-காரைக்குடி-விருதுநகர் இடையேயான ரயில் சேவை இயக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தாக்கல் காரணமாக சென்ற இரண்டு வருடங்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டு விருதுநகர்-காரைக்குடி இடையேயான ரயில் சேவை மட்டும் சென்ற நவம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்ட நிலையில் காரைக்குடி-திருச்சி இடையேயான ரயில் சேவையை மீண்டும் தொடங்குமாறு பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தார்கள்.

இந்நிலையில் வரும் 18ம் தேதி முதல் இந்த சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கின்றது. மாலை 4 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 4.53 மணிக்கு புதுக்கோட்டை செல்லும். பின் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5.50 மணிக்கு காரைக்குடிக்கு சென்றடையும். பின் காரைக்குடியிலிருந்து 19ஆம் தேதி முதல் காலை 9.40 மணிக்கு புறப்பட்டு 10.22 மணிக்கு புதுக்கோட்டைக்கு செல்லும். இதன்பின் அங்கிருந்து புறப்பட்டு திருச்சிக்கு 11:35 மணிக்கு வந்தடையும்.

Categories

Tech |