Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்… நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்….!!!!!!!

கொரோனா ஊரடங்கு தொடர்புக்கு பின் படிப்படியாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லை சந்திப்பில் இருந்து திருச்செந்தூருக்கு காலை 6 மணி, ஏழு 20 மணி,6. 45 மணி ஆகிய மூன்று நேரங்களில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் நெல்லையிலிருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக காலை 10 மணிக்கு மாலை 4.05 மணிக்கு இரண்டு சிறப்பு ரெயில்கள்  நேற்று முதல் இயக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு கூடுதலாக காலை 10.15 மணிக்கும் மாலை 4.25 மணிக்கு சிறப்பு ரயில்கள் நேற்று முதல் இயக்கப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி மாலை 6:15 மணிக்கு சிறப்பு ரயில்களும், நெல்லை பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகிறது.

நேற்று முதல் கூடுதலாக நெல்லையிலிருந்து செங்கோட்டைக்கு காலை 9.10 மணிக்கும், மதியம் 1:50 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு காலை 6:40 மணி மாலை 5:50 மணிக்கு சிறப்பு ரயில்களும் செங்கோட்டை வழியாக பாலக்காடு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது. நேற்று முதல் கூடுதலாக செங்கோட்டையில் இருந்து நெல்லைக்கு காலை பத்து ஐந்து மணி மற்றும் பிற்பகல் 2:55 மணிக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் கூடுதலாக ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |