விரைவு ரயில் சேவையை மத்திய மந்திரிகள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில்வே நிலையத்திலிருந்து மங்களூருக்கு அதிவிரைவு ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து மாலை 4:20 மணிக்கு கிளம்பி மங்களூருக்கு மறுநாள் காலை 7:10 மணியளவில் சென்றடையும். இதேபோன்று மங்களூரில் இருந்து மாலை 4:55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:05 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் சேவை 6 மாதத்திற்கு ஆவடியில் நின்று செல்லும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து மாலை 4:20 மணிக்கு புறப்படும் ரயில் ஆவடியில் 4:48 மணி அளவில் நிற்கும். இதேபோன்று மங்களூரில் இருந்து புறப்படும் ரயில் காலை 6:58 மணி அளவில் ஆவடியில் நிற்கும். இந்த ரயில் சேவையை மத்திய இணை மந்திரிகள் எல். முருகன் மற்றும் வி. முரளிதரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மேலும் நிகழ்ச்சியில் துரை சந்திரசேகர் எம்எல்ஏ மற்றும் ரயில்வே மேலாளர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.