Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!…. கொழும்பு டூ யாழ்ப்பாணம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ரயில்கள் பொது போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு புதிய ரயில் சேவை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தொடங்கப்பட உள்ளது. அந்த வகையில் மார்ச் 11ஆம் தேதி முதல் வாரம்தோறும் இனி இரவு 10 மணிக்கு கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ரயில் புறப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

அதேபோல் எதிர்திசையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தில் இருந்து மீண்டும் புறப்பட்டு கோட்டை ரயில் நிலையத்திற்கு அதிகாலை 5 மணிக்கு ரயில் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலில் கிட்டத்தட்ட 530 பயணிகள் வரை செல்ல முடியும். ஏற்கனவே இலங்கையில் பேருந்து போக்குவரத்து டீசல் தட்டுப்பாட்டால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மத்தியில் இந்த புதிய ரயில் சேவை மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |