ரயில் பயணிகளுக்கு படுக்கை விரிப்புகள், போர்வைகள் ஆகியவற்றை மீண்டும் வழங்கவுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக பரவி வந்த கொரோனா தொற்றின் காரணமாக பல தரப்பு வேலைகளும் முடங்கியுள்ளது. அந்த வகையில் முக்கியமான துறைகளில் ஒன்று ரயில்வே துறை. இந்தத் துறையில் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் முன்னாள் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் அனைத்து இந்திய ரயில்வே ரயில்களில் இயங்கும் ஏசி பெட்டிகளில் உள்ள போர்வைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் கர்டெய்ன்ஸ்களை வழங்குவதிலிருந்து திரும்ப பெற முடிவு செய்தார்.
இந்நிலையில் கொரோனா காலத்தில் லினன் துணிகள் மீதான கட்டுப்பாடுகளை திரும்ப பெற்ற நிலையில், இந்திய ரயில்வே துறை பயணிகளுக்கு லினன் துணிகளை இன்னும் வழங்கவில்லை என சில செய்திகள் வெளியாகியுள்ளது. எனவே இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளது.
ரயில் பயணிகளுக்கு கொடுக்கப்படும் போர்வைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் லினன் துணிகளை மீண்டும் வழங்குவது குறித்து தேசிய டிரான்ஸ்போர்ட்டர் அறிவித்த தேதியிலிருந்து மீண்டும் விநியோக தொடங்குவதாக ரயில்வே அமைச்சகம் தரப்பில் கூறியுள்ளது. இதையடுத்து வருகிற மாத தொடக்கத்தில் இருந்து ரயில் பெட்டிகளுக்கு லினன் படுக்கை விரிப்புகள், போர்வைகள் மற்றும் கர்டெய்ன்ஸ்களை பயணிகளுக்கு வழங்க உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.