அந்தியோதயா ரயில் 20 முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு அந்தியோதயா ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலை வந்தடையும். இந்த ரயில் திருச்சியில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.20 மணிக்கு வந்து சேருமாறு தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இதன்பிறகு 20 முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த ரயிலை இதற்கு முன்பு செல்லும் இன்டர்சிட்டி ரயிலை முந்தி செல்லுமாறு தற்போது கால அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலில் செல்லும் பயணிகள் மதிய உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இதன் காரணமாக ரயிலின் வேகத்தை அதிகரிக்குமாறு பல்வேறு கோரிக்கைகள் வந்தது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு 14-ஆம் தேதி முதல் அந்தியோதயா ரயில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றப்பட உள்ளது. மேலும் இந்த ரயில் நாகர்கோவிலுக்கு மதியம் 2.20 மணிக்கு பதிலாக மதியம் 12.50 வந்து சேரும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.