தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முன்பு செங்கோட்டை-மதுரை இடையே 3 பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் காலை 7 மணி, காலை 11 மணி மற்றும் மாலை 5 மணிக்கு இயக்கப்பட்டது. இதனால் செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், பாம்பு கோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மக்கள் பயன்பெற்று வந்தனர். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
T. No. 06662/06665 Sengottai- Madurai- Sengottai- Madurai Unreserved Express Special services resume operations from 1st April 2022
Members of Passenger Associations & Trade&Industry forum welcoming Sengottai – Madurai unreserved express special train at Rajapalayam -Glimpses! pic.twitter.com/0wAIPGP4UL
— Southern Railway (@GMSRailway) April 2, 2022
தற்போது தொற்று குறைந்து விட்டதால் இந்த ரயில் சேவையை மீண்டும் இயக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த ரயில் சேவையை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே அனுமதி வழங்கியுள்ளது. இதன் காரணமாக மதுரை கோட்டத்தில் இருந்து திருச்சி-மானாமதுரை-திருச்சி, திருநெல்வேலி-நாகர்கோவில்-திருநெல்வேலி, செங்கோட்டை- மதுரை-செங்கோட்டை பகுதிகளுக்கு இடையே ரயில் சேவை இயக்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து மதுரை-செங்கோட்டை விரைவு ரயில் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயங்கி வருகிறது. இதன் காரணமாக ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.