Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. தெற்கு ரயில்வே வெளியிட சூப்பர் அறிவிப்பு….!!!!

புதிய மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் தினமும் 30 பயணிகள் ரயில் செல்கிறது. அதில் கோவை-மும்பை, திருநெல்வேலி-தாதர், மயிலாடுதுறை- மைசூர், கண்ணூர்- எஸ்வந்த்பூர், தூத்துக்குடி-மைசூர், நாகர்கோவில்- பெங்களூர், எர்ணாகுளம்- பெங்களூர், கொச்சுவேலி- எஸ்வந்த்பூர், சேலம்- எஸ்வந்த்பூர், தர்மபுரி- பெங்களூர் போன்ற ரயில்கள் இங்கு நின்று செல்கிறது. கடந்த 2 வருடங்களாக பெங்களூர்-ஓமலூர் இடையே மின்சார ரயில் வழித்தடம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்பிறகு பெங்களூரு-ஓசூர் இடையே மின்சார ரயில் சேவை இயங்கியது. தற்போது மின்சார வழித்தடம் அமைக்கும் பணி தர்மபுரி வரை நிறைவடைந்தது.

இதில் எவ்வித தொழில்நுட்ப கோளாறும் இல்லாததால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே பெங்களூரு-ஓசூர் மின்சார ரயில் சேவை இனி தர்மபுரி  ரயில் நிலையம் வரை நீடிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி காலை 7.30க்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் ரயில் பையப்பனஹள்ளி, கர்மேலனரம், ஆனேக்கல், ஓசூர்,‌ ராயக்கோட்டை, மாரண்டஹள்ளி, பாலக்கோடு வழியாக தர்மபுரியில் ரயில் நிலையத்திற்கு வரும். இந்த ரயில் தர்மபுரி மாவட்டத்திற்கு காலை 10:45 மணிக்கு வரும். இதன் மூலமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து பெங்களூருக்கு வேலைக்கு மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் பயன் அடைவார்கள்.

Categories

Tech |