நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.குறுகிய தூர பேசஞ்சர் சேவைகளும் அதிக கட்டணத்துடன் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வரும் நிலையில் அனைத்து மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
எனவே சிறப்பு ரயில் சேவையை நிறுத்துவதற்கு ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. கொறடா காலத்தில் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் அனைத்தும் வழக்கமான ரயில் சேவையாக மாற்றப்படுகிறது.ரயில் கால அட்டவணை அடிப்படையில் வழக்கமான எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படும்.ரயில் பயணிகளுக்கு உறவிற்கு முந்தைய கட்டணம் மட்டுமே இனி மேல் வசூல் செய்யப்படும்.மிக விரைவில் இந்த உத்தரவு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி 1700 க்கும் மேற்பட்ட ரயில்கள் பழையபடி இயக்கப்படும். சிறப்பு ரயில்களில் முதல் எண் 0 ஆக இருந்து வந்தது.இந்த நடைமுறை மாற்றப்பட்டு வழக்கமான ரயில்களுக்கான எண்கள் இடம் பெற்றிருக்கும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இது ரயில் பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.