இந்தியாவில் பெரும்பாலானோர் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்கின்றனர்.தட்கல் டிக்கெட் எடுத்தாவது ரயிலில் சென்று விட வேண்டும் என பலரும் முயற்சிக்கின்றனர்.மற்ற போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்து தான் பயணிகளுக்கு சிறந்ததாக உள்ளது. அப்படி ரயிலில் பயணம் செய்வோம் பயணத்திற்கு முன்பாக அதில் உள்ள விதிமுறைகள்,கட்டுப்பாடுகள் மற்றும் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
ஐஆர்சிடிசி ஆப் அல்லது இணையதளம் மூலமாக பலரும் டிக்கெட் முன்பதிவு செய்து வருகிறார்கள்.உங்களின் ஐ ஆர் சி டி சி கணக்கில் இருந்து ஒரு மாதத்தில் ஆறு டிக்கெட்டுகளை மட்டுமே முன் பதிவு செய்ய முடியும். அதைவிட அதிகமான டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய வேண்டும் என்றால் உங்கள் கணக்கை ஆதாரத்துடன் இணைத்து இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அப்படி செய்திருந்தால் ஒரு மாதத்தில் ஒரு கணக்கில் இருந்து பணம் டிக்கெட் புக்கிங் செய்து கொள்ள முடியும்.
இதற்கு ஐ ஆர் சி டி சி யின் ஆப் அல்லது இணையதளத்தில் சென்று my account பிரிவில் உள்ள link your Aadhar என்பதை கிளிக் செய்து உங்களின் ஆதார் எண் மற்றும் பெயர் போன்ற விவரங்களை பதிவிட்ட பிறகு ஓடிபி கொடுக்க வேண்டும்.இவ்வாறு உங்களுடைய கேஒய்சி விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு ஆதார் நம்பர் ஐஆர்சிடிசி கணக்குடன் எளிதில் இணைக்கப்பட்டு விடும்.