இந்தியர்கள் பெரும்பாலானோர் பிரதான பயணங்களுக்கு ரயிலில் செல்கின்றனர். மற்ற போக்குவரத்து சேவைகளை ஒப்பிடுகையில் ரயிலில் கட்டணமும் மிகக் குறைவுதான். அதுமட்டுமல்லாமல் பாதுகாப்பாகவும் சௌகரியம் ஆகவும் பயணிக்க முடியும். அப்படி நீங்கள் அடிக்கடி இரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் இது உங்களுக்கான முக்கிய செய்தி. IRCTC மூலமாக டிக்கெட் புக்கிங் செய்து ரயில் பயணம் செய்பவர்கள் சில முக்கியமான விதிமுறைகளை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம்.
பொதுவாக ரயிலில் பயணம் செய்வது பாதுகாப்பானது. ஆனால் அதிலும் சில சமயங்களில் திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அப்படி ரயிலில் பயணம் செய்யும் போது உங்களுடைய பொருள் திடீரென திருட்டு போனால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?. ரயிலில் பயணிக்கும் போது இலக்கியச் திருடப்பட்டால் அதற்கு இழப்பீடு வழங்கப்படும்.
இது பலருக்கும் தெரியாது. உங்களுடைய திருட்டுப்போன பொருள்களுக்கு நீங்கள் இழப்பீடு கேட்கலாம்.ஆறு மாதங்களுக்குள் உங்களுடைய பொருட்கள் வரவில்லை என்றால் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சென்று முறையிடலாம். அதாவது உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி ரயிலில் பயணம் செய்யும்போது லக்கேஜ் திருடப்பட்டால் RPF காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அப்போது ஒரு படிவத்தை நீங்கள் நிரப்ப வேண்டும். அதன் பிறகு அடுத்த 6 மாதங்களுக்குள் பொருட்கள் வரவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றத்தில் நீங்கள் முறையிடலாம்.
அவ்வாறு காணாமல் போன பொருட்களின் விலையை கணக்கிட்டு ரயில்வே நிர்வாகம் உங்களுக்கு இழப்பீடு வழங்கும். அதனைப்போலவே பயணிகளின் நலனுக்காகவும் பாதுகாப்புக்காகவும் நிறைய விதிமுறைகளை இந்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது. எனவே ரயிலில் பயணம் செய்பவர்கள் அனைவரும் முக்கியமான விதி முறைகளை தெரிந்து கொள்வது மிகவும் நல்லது.