Categories
மாவட்ட செய்திகள்

ரயில் பயணிகளே….. இனி சீசன் டிக்கெட்…. வெளியான சூப்பர்அறிவிப்பு….!!!!

கோவையில் இருந்து திருப்பூர், கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் வேலைக்காக சென்று வருகிறனர். இதற்கு பலரும் அரசு பஸ்கள் மற்றும் சொந்த வாகனங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கோவையில் இருந்து அருகில் உள்ள நகரங்கள் செல்லும் தொழிலாளர்கள் பயன்பெறக்கூடிய வகையில் மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவலுக்கு பிறகு பிறகு கோவையில் இருந்து மெமு ரயில் சேவை தொடங்கியுள்ளது. இந்த ரயில் மூலம் கோவை மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர், பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று திரும்ப முடியும். அதிலும் மேட்டுப்பாளையம் சாலையில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் அந்த வழியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டுனர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரயிலை பொது மக்கள் மற்றும் தொழிலாளர் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் இந்த ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் மெமோ ரயிலில் தினமும் பயணிக்க வசதியாக சீசன் டிக்கெட் வழங்கப்படுகிறார். அந்த சீசன் டிக்கெடுகளை யூ டி எஸ் செயலி மூலம் பெறலாம. அதுமட்டுமில்லாமல் ரயில் நிலையத்தில் உள்ள தானியங்கி டிக்கெட் விற்பனை இயந்திரம் மூலமும், டிக்கெட் கவுண்டர்களிலும் வாங்கிக் கொள்ளலாம். எனவே மெமு ரயில்களில் சீசன் டிக்கெட் எடுப்பதன் மூலம் குறைந்த செலவில் தங்கள் வேலை செய்யும் இடங்களுக்கு தொழிலாளர்கள் எளிதாக சென்று வர முடியும்

Categories

Tech |