Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே உஷார்…. இந்த தப்பை மட்டும் பண்ணாதீங்க…. ரயில்வே திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

இந்திய மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். இதில் கட்டணமும் குறைவு பாதுகாப்பு மற்றும் சௌகரியம் உள்ளது. அதனால் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் ரயில் பயணம் செய்கின்றனர். ரயில்களில் பல்வேறு விதிமுறைகள் செயல்பாட்டில் உள்ளது.அதை ரயில் பயணிகள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதில் சில விதிமுறைகள் உங்களுக்கே ஆபத்தாக முடியலாம். ரயிலில் நீங்கள் பயணம் செய்யும்போது இந்த தவறை செய்தால் அபராதம் மட்டுமல்லாமல் சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளது.

அப்படி ரயிலில் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு இது ஒரு முக்கியமான செய்தியாகும். இது தொடர்பாக ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விதிமுறை பயணிகளின் வசதிக்காகவும் பாதுகாப்பிற்காகவும் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை கட்டாயம் அனைவரும் கடைப்பிடித்தே ஆக வேண்டும். அதன்படி ரயிலில் பயணம் செய்யும் போது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ஒருபோதும் எடுத்துச் செல்லக்கூடாது.

இந்த தவறை யாராவது செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படலாம். ரயிலில் டீயை உருவாக்குவது அல்லது எரியக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்வது என்பது ரயில்வே சட்டம் 1989 பிரிவு 164 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். மேலும் இந்திய ரயில்வே பிறப்பித்துள்ள உத்தரவுப்படி மண்ணெண்ணெய், காய்ந்த புல், அடுப்பு, பெட்ரோல், மண்ணெண்ணெய், கேஸ் சிலிண்டர், தீப்பெட்டி, பட்டாசு அல்லது தீயை பரப்பும் வேறு எந்த பொருட்களையும் வைத்துக்கொண்டு பயணிக்க கூடாது.

தீ விபத்துகளை கட்டுப்படுத்த ரயில்வே வகுத்துள்ள திட்டத்தின்படி ரயில் பயணத்தில் மட்டுமல்லாமல் பிளாட்பார்ம் போட ரைட் வளாகத்திலும் பயணிகள் யாரும் புகை பிடிக்கக் கூடாது. அப்படி செய்தால் மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் ரயில் பயணத்தின் போது ரயில் நிலையங்களில் பயணிகள் செய்யும் இந்த தவறுக்கு கடுமையான அபராதம் விதிக்க நேரிடும். அதாவது குறைந்தது ஆயிரம் ரூபாய் முதல் அபராதம் வசூலிக்கப்படும். எனவே ரயில் பயணிகள் அனைவரும் ரயில்வே தொடர்பான விதிமுறைகளை பற்றி தெரிந்து கொண்டு பயணிப்பது மிகவும் நல்லது.

Categories

Tech |