Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளே….. தனியார்மயம் தொடர்பாக….. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ரயில்வே அமைச்சர்….!!!!

இந்திய ரயில்வே தனியார் ஆப்பரேட்டர்களை கொண்டு ரயில்களை இயக்குவது குறித்து சந்தேகங்களுக்கு ரயில்வே அமைச்சர் பதிலளித்துள்ளார்.

தனியார் நிறுவனங்களால் பயணிகள் ரயில்களை இயக்கும் எந்த திட்டமும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் ஜூலை 22 ஆம் தேதி தெரிவித்தார். முன்னதாக ரயில்வே தனது நெட்வொர்க்கில் தனியார் ரயில்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 2023-24ம் நிதியாண்டில் முதலில் 12 பெட்டிகளை இயக்க தொடங்கும் என்றும், 2027க்குள் 151 பெட்டிகளை தனியார் ஆபரேட்டர்களால் இயக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுத்து பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் ரயில்வே துறையிடம் தற்போது தனியார் மயமாக்கல் குறித்த எந்த திட்டமும் இல்லை என்று தெரிவித்தார். இருப்பினும் IRCTC மற்றும் Megha Engineering & Infrastructures ஆகிய இரண்டு ஏலதாரர்கள் மட்டுமே நிதி ஏல ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நீண்ட காலமாக இந்திய ரயில்வே தனியார் வசம் ஒப்படைக்கப்படும் என்று தகவல் பரவி வந்தது. ஏற்கனவே ஏர் இந்தியா உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்திய ரயில்வே தொடர்பான இந்த செய்தி பொதுமக்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அரசு இதை தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |