இந்திய ரயில்வேயானது இன்று 250-க்கும் அதிகமான ரயில்களை ரத்துசெய்திருக்கிறது. பயணிகள் வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பு ரயில்கள் செல்லும் நேர நிலவரத்தைத் தெரிந்துக்கொள்வது நல்லது ஆகும். மக்களின் வசதியை முன்னிட்டு ரத்து செய்யப்படும் (அ) தாமதாக வரும் ரயில்கள் தொடர்பான தகவல்களை இந்தியன் ரயில்வே வெளியிட்டு வருகிறது. இவற்றில் ரயில்கள் ரத்து, ரயில்கள் தடம் மாற்றிவிடப்படுவது, தாமதமாக வருவது உள்பட பல பட்டியல்கள் வெளியாகிறது. இந்த பட்டியலில் பல மாநிலங்களைக் கடந்துவரும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை அதிகமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று டிச..18ஆம் தேதி வெளியாகிய இந்தியன் ரயில்வேயின் பட்டியலில் 260 ரயில்கள் முழுமையாக ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதேநேரம் 35 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அவற்றில் உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப் என அதிகளவில் வடமாநில ரயில் போக்குவரத்தில் அதிக மாற்றங்கள் செய்யபப்ட்டுள்ளது.
இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வமான இணையதளமான enquiry.indianrail.gov.inன் சமீபத்திய புதுப்பிப்பின்படி, 18 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 18 ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது. இப்போது குளிர்காலம் என்பதால் ரயில் இயக்கம் தாமதமாகிறது. கடந்த சில தினங்களாகவே காலை மற்றும் இரவு வேளைகளில் அதிகமான பனிமூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து மட்டுமல்ல, சாலை மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.